கோவை: வால்பாறை நகரில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: வால்பாறை நகரில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் குடியுருப்பு பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக வால்பாறை அரசு மருத்துவமணை மற்றும் கக்கன்காலனி பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் பற்றி வீடியோ பதிவுகள் வாட்ஸ் ஆப் பில் வலம் வந்த உள்ளன.
இதனை தொடர்ந்து, வால்பாறை வனச்சரகர் செந்தில் குமார் மற்றும் வனவர் முனியான்டி தலைமையிலான வனத்துறையினர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பணியில் உள்ள மருத்துவர் செவிலியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனை கழிவுகளை பாதுகாப்பாக புதைக்கும் படி அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, புதுமார்க்கெட் பகுதியை ஒட்டியுள்ள எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் கக்கன் காலனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இரவு நேரங்களில் நடமாடுவதை தவிர்க்கவும், இறைச்சி கழிவுகளை குழி தோண்டி புதைக்கவும் வலியுறுத்தினார். மேலும், அப்பகுதியில் வனத்துறையினரால் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.