கோவை: கோவையில் சிறுவர், சிறுமியர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மீறினால் அவர்களின் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பட்டம் விட்டு விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல தரப்பில் இருந்தும் புகார்கள் வரப்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு பட்டம் விட்டு விளையாடுவதால் பட்டம் அறுந்து அருகில் உள்ள உயரழுத்த மின்பாதையில் சிக்கி விடுகிறது இதன் காரணமாக மின் தடை ஏற்படுவதுடன் மின்சார வாரியத்திற்கு இது பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சாலையில் செல்லும் போது பயணிகள் மீது பட்டத்தின் கயிறு இறுக்கி மரணம் வரை கொண்டும் செல்லும் ஆபத்து உள்ளதால் பட்டம் விடுவதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார். மீறினால் அவர்களின் பெற்றோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.