கோவையில் மணிப்பூர் பெண்களை, சீனாவை சேர்ந்தவர்கள் என்று நினைத்து 'கொரோனா அண்ட் கோ' என்று சொல்லி தகராறில் ஈடுபட்ட இளைஞர் கைது
கோவை: கோவையில் மணிப்பூர் பெண்களை, சீனாவை சேர்ந்தவர்கள் என்று நினைத்து 'கொரோனா அண்ட் கோ' என்று சொல்லி தகராறில் ஈடுபட்ட இளைஞர் கைது .
மதுபோதையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை சீனாவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய்பாபா காலனி காவல்துறையினர் இன்று அவரை கைது செய்தனர்.
கோவை அழகேசன் சாலையில் இரவு அறைக்கு திரும்பி கொண்டிருந்தமணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஜென்னி (21), மரியா (23) ஆகிய இளம்பெண்கள் இருவரை மறித்து சீனா நாட்டை சேர்ந்தவர்களா எனக்கூறி, அவர்களை கொரோனா அண்ட் கோ' என கூறி தகராறில் ஈடுபட்டதாக போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விக்னேஷ் (26) என்பவரை சாய்பாபா காலனி காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையில் மேகாலாயா, மணிப்பூர், அஸ்ஸாம் உட்பட பல்வேறு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக சாய்பாபா காலனி பகுதியில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மணிப்பூர், மேகாலாயா மாநிலங்களை சேர்ந்த பெண்களிடம்அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.
வடமாநில பெண்களின் தோற்றத்தை வைத்து அவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள் என நினைத்து கொண்டு அவர்களை தகாத வார்த்தையில் திட்டியதுடன் தள்ளிவிட்டுள்ளனர்.
இதுகுறித்துஇன்று வடமாநில பெண்கள் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், இந்த புகாரில் கொரோனா பரவுகின்றது என கூறி,
"கொரோனா அண்ட் கோ" எனஅவர்களை கேலியாக பேசுவதாகவும், தகாத வார்த்தையில்திட்டுவதுடன் தள்ளிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தகராறு செய்த வாலிபரின்வீடியோவையும் வடமாநில பெண்கள் சாய்பாபா காலனி காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த இளைஞர்கள் குறித்துவிசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று அந்த நபர் கைது செய்யப்பட்டார்.