திருப்பூர்: திருப்பூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தின் மீது சாதிய வன்கொடுமை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தின் மீது சாதிய வன்கொடுமை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேவம்பாளையம் கிராமத்தில் உள்ள லோகநாதன்(27) என்பவரின் ஆட்டுக்குட்டி, மூர்த்தி(21) என்பவரின் தோட்டத்தில் சென்றதாக லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை மூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் சாதியின் பெயரை கூறி தரக்குறைவாக நடத்தி உள்ளனர்.
மேலும், லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊர் பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஜாதி ஒழிப்பு கூட்டமைப்பு சார்பாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.