கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக சமூக வலயதளத்தில் செய்தி பரவி வரும் நிலையில், தமிழக அரசு சார்பாக எந்தவித அதிகாரபூர்வ அற்றிவிப்பும் வரவில்லை என கோவையில் உள்ள டாஸ்மாக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.
மேலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் நாளொன்றுக்கு ஒரு டாஸ்மாக் கடையில் 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.