கோவை: மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் 10,000 வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் 10,000 வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதில் காரமடை அதன் சுற்றுவட்டார பகுதியை பயிரிட்டு இருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறாவளி காற்றில் சிக்கி சேதமானது.
காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2000 வாழைகள் சூறாவளி காற்றில் சிக்கி இரண்டாக முறிந்து சேதமானது.
மேலும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் தோட்டத்தில இரண்டரை ஏக்கரில் பயிரிட்டு இருந்த 3500 வாழை மரங்கள் சுப்பையன் என்பவரது தோட்டத்தில் ஒரு ஏக்கர் வாழை என மொத்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சிக்கி சேதம் ஆகியுள்ளது.
இதனால் ஒவ்வொரு விவசாயும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டு இருந்த வாழைகள் ஒரேநாளில் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.