கோவை: கோவையில் மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் காலை 9 மணியில் இருந்தே டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று மது வாங்கி செல்ல போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினர்.

கோவை சவுரிபாளையம் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப் பிரியர்கள் டோக்கன் பெற்ற மகிழ்ச்சியில் நின்று கொண்டிருந்தனர்.
காலை 10 மணிக்கு கடை திறந்தவுடன் மதுப் பிரியர்கள் கைநிறைய மது வகைகளை அள்ளி மகிழ்ச்சியுடன் சென்றனர். சவுரிபாளையம் கடை முன்பு ஒரு சிலர் கடை முன்பு விழுந்து வணங்கியும், மது பாட்டில்களை வாங்கி முத்தம் கொடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், ஒரு சிலர் மது வாங்க நீண்ட வரிசையில் நிற்பது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிய கூடாது என்பதற்காக முக கவசம் அணிந்தும், தலையில் கேரிபேக் வைத்து மறைத்து கொண்டு வரிசையில் நின்று மது வகைகளை வாங்கி சென்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த முறை 207 மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 76 மதுபான கடைகள் சேர்த்து 283 மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் கடைகள் திறக்கப்பட்டதால் நகர் பகுதி கடைகளில் கூட்டம் குறைவாகவும் புறநகர் பகுதிகளில் கூட்டம் அதிகமாகவும் காணப்பட்டது.