குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.102 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம், கொரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 102 கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி அளிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம், கொரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 102 கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி அளிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு சில தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தொழில்கள் செயல்படலாம்? பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இதனிடையே, மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு தொழில் முனைவோர் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், தொழில் துறையினரின் கோரிக்கைகளை அரசின் நிதிநிலை மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்டு பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து தொழில்துறையை மீட்டெடுக்க உதவிட வேண்டும் எனவும் புதிய தொழில்களுக்கான அனுமதி எளிதாக வழங்கப்படும், கடனுதவிக்கான நடைமுறைகளும் எளிதாக்கப்படும் போன்ற அறிவிப்புகளையும் முதலமைச்சர் இந்த ஆலோசனையின்போது வெளியிட்டார்.

மேலும், தொழில்துறையினர் தம்மை சந்திக்க விரும்பினால் 24 மணிநேரத்தில் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறிய அவர், மருத்துவம், மின்சாரம், ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கு சிறப்பு தொகுப்பு உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

அதேபோல, ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதற்காக, அரசு அலுவலர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், தொழில் துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வல்லுநர் குழு ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.

தற்போது, சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படத் துவங்கியுள்ள நிலையில், அனைத்து தொழிற்சாலைகளும் அரசு அளித்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருவதைப் பாராட்டுகிறேன். சூழ்நிலையைப் பொருத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும். தொழில் துறையினர் விழிப்போடு இருந்து, நோய் பரவலைத் தடுத்து, தகுந்த பாதுகாப்புடன் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிணை சொத்தின்றி உடனடிக் கடன் வழங்கும் திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம், கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை 31.3.2020 அன்று நான் அறிவித்திருந்தேன். இத்திட்டம் மூலம் இதுவரை 799 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 102 கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, சிட்பி மூலம், தேவையான நிதியினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு ஒதுக்கிட வலியுறுத்தி மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் கடிதங்கள் எழுதியுள்ளேன்.

அதன் விளைவாக, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இச்சலுகைகளை தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பெற்று பயன்பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை ஊக்குவித்திட, தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...