திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் அழகு நிலையங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் அழகு நிலையங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அழகு நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு கொடுத்த தளர்வுகளின் பட்டியலிலும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 45 தினங்களுக்கு மேலாக ஆயிரக்கணக்கான அழகு நிலைய ஊழியர்கள் வருமானம் இன்றி தவிப்பதாகவும், தொற்று ஏற்படாதவாறு உரிய பாதுகாப்புகளின் அடிப்படையில் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டி அழகு நிலைய கூட்டமைப்பு சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.