திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், புதிய முறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும், 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.