மேட்டுப்பாளையத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உதவி இயக்குநர் உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உதவி இயக்குநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உதவி இயக்குநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக ரஜினி நடித்த எந்திரன் மற்றும் 2.0 போன்ற படங்களுக்கு இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், இன்று அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் அருண்பிரசாத் வந்துள்ளார். அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஜடையம்பாளையம் பிரிவு அருகே வந்த போது கட்டுபாட்டினை இழந்த இருசக்கர வாகனம், நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.



இதில் தூக்கி வீசப்பட்ட அருண்பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை போலீசார் அருண்பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...