கோவை பழங்குடி மாணவியின் மருத்துவ படிப்பிற்கு ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம் பொறுப்பேற்பு!

கோவை: கோவை பழங்குடி மாணவியின் மருத்துவ படிப்பிற்கு ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


கோவை: கோவை பழங்குடி மாணவியின் மருத்துவ படிப்பிற்கு ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் அருகேயுள்ள ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியில் மலசர் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதியுறுவதை பற்றியும், சங்கவி என்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை குறித்து செய்திகள் வெளியானது.

இதனையடுத்து, ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தினர் மாணவி சங்கவிக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையினை நேரில் வந்து வழங்கினர்.

மேலும், நீட் பயிற்சி மற்றும் மருத்துவ படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று கொள்வதாக அவ்வமைப்பு உறுதியளித்துள்ளது. நான்கு சந்ததிகளாக அரசின் அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியின் நடவடிக்கையால் தற்போது மகிழ்ந்துள்ளனர். பல மாதங்களாக திறக்கப்படாத கழிப்பறையை, திருமலையாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் திறந்துள்ளது.



கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு, தண்ணீர் வசதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், சாலை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்துள்ள மாவட்ட நிர்வாகம், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...