கோவையில் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரி, எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து நூதன போராட்டம்

கோவை: கோவையில் சர்வதேச செவிலியர் தினத்தில் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரி, எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து நூதன முறையில் போராட்டம் செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் சர்வதேச செவிலியர் தினத்தில் காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரி, எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து நூதன முறையில் போராட்டம் செய்து வருகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் தமிழக அரசு, மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் சுமார் 10,000 செவிலியர்களை போட்டித் தேர்வின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 7700க்கு பணி அமர்த்தியது. 2 ஆண்டுகால பணி முடிந்ததும் அவர்கள் காலமுறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்டு பணி நிரந்தரம் செய்வதாக அரசு உறுதியளித்து உத்தரவிட்டது. ஆனால் 5 வருடங்கள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த முறையிலே வைத்துள்ளது.

நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக செவிலியர் பணியை ஒப்பந்த செவிலியர்கள் செய்து கொண்டு வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு ஒரு பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதை பரிசீலிக்க கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது.

ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு சம வேலை செய்யும் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காமல் வெறும் ரூபாய் 14000 மட்டுமே தொகுப்பு ஊதியமாக வழங்கி வந்தது. மேலும் பணியில் சேர்ந்து 5 வருடங்கள் முடிந்தும் இந்த அரசு எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவில்லை.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியிலும் இந்த செவிலியர்கள் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக பணி செய்தும் ஊதியத்தில் பாரபட்சம் காட்டும் இந்த அரசு காலமுறை ஊதியம் வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...