'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் மருத்துவ உதவி கேட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் உதவி செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் திமுக மாவட்ட செயலாளர்கள் விண்ணப்பம்!

கோவை: "ஒன்றிணைவோம் வா" தொலைபேசி மூலம் உதவி கோரிய விண்ணப்பங்களுக்கு உதவிகள் செய்து வந்த போதிலும், மாவட்ட நிர்வாகமும் உதவி செய்ய வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பங்களை வழங்கினர்.


கோவை: "ஒன்றிணைவோம் வா" தொலைபேசி மூலம் உதவி கோரிய விண்ணப்பங்களுக்கு உதவிகள் செய்து வந்த போதிலும், மாவட்ட நிர்வாகமும் உதவி செய்ய வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பங்களை வழங்கினர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய "ஒன்றிணைவோம் வா" தொலைபேசி மூலம் உதவிகோரும் திட்டத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதன்மூலம், தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களிடம் இருந்து பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் மூலம் உதவி கேட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை திமுகவினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், அவர்களது கோரிக்கைகளை திமுகவினர் செய்து வந்தபோதும், மாவட்ட நிர்வாகமும் வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்களை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சிஆர்.இராமசந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முன்னதாக, நா.கார்த்திக் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில்;-

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடை உத்தரவு அமுலில் உள்ளது. இந்த காலகட்டத்தில், வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக தலைவர் ஆணைக்கு இணங்க தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் திமுக தலைவரால் துவங்கப்பட்ட "ஒன்றிணைவோம் வா" தொலைபேசி மூலம் உதவிகள் கேட்டவர்களுக்கும் தேவையானவற்றை கொடுத்து உதவி வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவர்கள், மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் கேட்டுள்ளனர். அதை மாவட்ட நிர்வாகமும் செய்ய வலியுறுத்த வேண்டும் என்ற திமுக தலைவரின் ஆலோசனைப்படி மாவட்டம் முழுவதும் வந்த 4102 விண்ணப்பங்களை திமுக கோவை மாவட்ட செயலாளர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...