திருப்பூர்: திருப்பூரில் இரண்டாம் கட்டமாக 1464 வடமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் இரண்டாம் கட்டமாக 1464 வடமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அவர்களில் இரண்டாம் கட்டமாக இன்று 1464 பேர் ரயில் மூல சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் மாநிலத்திற்கு ரயில் மூலம் 1164 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, வடமாநில தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் மூலம் செல்பவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், திருப்பூரில் சொந்த ஊர் செல்ல விருப்பப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் என்றும், இதுவரை பேருந்துகள் மூலம் 700 பேர் ஆன்லைன் பாஸ் பெற்றுச் சென்றுள்ள நிலையில் வெளி மாநிலம் செல்ல சிறப்பு ரயிலுக்காக 10 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், இனிவரும் நாட்களில் உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.