கோவை கேசிஆர் மில் நிர்வாகத்தின் மீது ஏஐசிசிடியு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

கோவை: சோமனூரில் உள்ள கேசிஆர் மில்லில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி பெண்களுக்கு வேலைப்பளுவை திணித்து நெருக்கடி ஏற்படுத்துவதாக ஏஐசிசிடியு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


கோவை: சோமனூரில் உள்ள கேசிஆர் மில்லில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி பெண்களுக்கு வேலைப்பளுவை திணித்து நெருக்கடி ஏற்படுத்துவதாக ஏஐசிசிடியு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.



இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் தாமோதரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள கேசிஆர் டெக்ஸ்டைல் நிறுவனம் செயல்படுகிறது. இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கு காலத்திலும் பழங்குடி பெண்களை 16 மணி நேரம் வரை அனைவரும் பஞ்சாலை குள்ளேயே தங்கவைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டுள்ளனர். மேலும், ஊதியத்தை மில் நிர்வாகம் தர மறுக்கிறது. அவர்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம் என்கிற விருப்பத்தையும் ஏற்க மறுக்கிறது.

எனவே, தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் கேசிஆர் மில்லில் ஆய்வு செய்து நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...