தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!

கோவை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் முதல் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் முதல் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், 11-ம் வகுப்பில் சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இறுதி பாடத்தின் போதும் கொரோனா பரவல் காரணமாக, பலர் தேர்வு எழுதவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருந்தது. உயர் கல்வி, தொழிற்கல்வி என்று பல முக்கிய விவகாரங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையாக இருக்கும் காரணம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்திய நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை:-

ஜூன் 1-ல் மொழிப்பாடமும், 3-ம் தேதி ஆங்கிலமும், 5-ம் தேதி கணிதமும், 6-ம் தேதி விருப்ப மொழிப்பாடமும், 8-ம் தேதி அறிவியலும், 10-ம் தேதி சமூக அறிவியலும், 12-ம் தேதி வொகேஷனல் பாடத்திற்கான தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...