நீலகிரி: திருத்துறைப் பூண்டி துப்புரவு ஆய்வாளர் வெங்கடாசலம் பணியின் போது, பா.ம.க கட்சி பிரமுகர் கல்விப்பிரியன் என்பவரால் அரிவாளால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப் பூண்டி துப்புரவு ஆய்வாளராக பணியில் இருப்பவர் வெங்கடாசலம். இவர் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் தங்களது பணியாளர்களுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பா.ம.க கட்சி பிரமுகருடன் ஏற்பட்ட பிரச்சினையில் அரிவாளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து குன்னூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு துப்புரவு ஆய்வாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் மால் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக முதல் அமைச்சருக்கு புகார் மனு அளித்துள்ளதாகவும் தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடக்காமல் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.