புதிய மின் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு.. திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் மனு!

கோவை: மத்திய அரசு புதிய மின் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் நிலை உள்ளதாகவும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் மனு அளித்தனர்.


கோவை: மத்திய அரசு புதிய மின் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் நிலை உள்ளதாகவும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில் மத்திய அரசு புதிய மின் திருத்த சட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய கொள்கையை மத்திய அரசே வகுக்கும் என கூறப்படுகிறது. இதனால் மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையங்கள் எல்லாம் இனிமேல் மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டில் இயங்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடுத்தர மக்களுக்கு 100 யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும், குடிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள இலவச மின் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்ற வகையில் மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் ஒப்பந்த அமுலாக்க ஆணையத்தின் மூலம் தீர்வு காணப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிகார போக்கினை விவசாயிகள் வன்மையாக கண்டிக்கிறோம்.

விவசாயம் நசிந்து வரும் நிலையிலும், இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமானால் இந்தியாவில் விவசாயம் பெருமளவில் பாதிக்கும். விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்துவார்கள், வாழ்வாதாரம் உரிமைகள் பாதிக்கப்படும்.

எனவே புதிய மின்சார சட்டத்தை மத்திய அரசை உடனடியாக கைவிடக் கேட்டுக் கொள்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் விவசாயிகள் உற்பத்தியை நிறுத்தாமல் மக்களின் உயிரை காக்க தங்கள் உயிரை பணயம் வைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...