நீலகிரியில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் மன அழுத்தம் குறைய தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்க்க ஏற்பாடு!

நீலகிரி: நீலகிரியில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் மன அழுத்தத்தில் இருந்து திரும்புவதற்காக தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


நீலகிரி: நீலகிரியில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் மன அழுத்தத்தில் இருந்து திரும்புவதற்காக தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்டவரால் வேறு யாருக்கும் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், உள்ளிட்ட மருத்துவ துறையை சேர்ந்தவர்களை மகிழ்விக்கும் விதமாகவும், மன அழுத்தத்தில் இருந்து இவர்கள் திரும்புவதற்காகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நீலகிரி மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு அதில் 11 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில் மூன்று நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் குடியிருந்து வந்த ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் சுகாதார செவிலியர்கள், கிராம செவிலியர்கள் ஆஷா, பணியாளர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று அருகில் உள்ளவர்கள் இவர்களுடைய தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரையும் அனுதினமும் கவனித்து நோய்த் தொற்று நோய் மேலும் பரவாமல் பாதுகாத்து வந்தனர்.

ஏறக்குறைய 45 நாட்களாக தொடர்ந்து மேற்கொண்டு வந்த இந்த பணியின் காரணமாக நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.



இதனை பாராட்டும் வகையிலும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.



உதகை தாவரவியல் பூங்காவற்கு வந்த இவர்கள் பூத்து குளுங்கும் வண்ண மலர்களைக் கண்டு தங்களது மன அழுத்தம் குறைவதோடு, இனி வரும் காலங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தாங்கள் தங்களது சேவையை தொடர்ந்து செய்ய இது போன்ற செயல் ஊக்குவிப்பதாக மருத்துவ அதிகாரி முத்துராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...