சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி சவர தொழிலாளர்கள் நலசங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி சவர தொழிலாளர்கள் நலசங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி சவர தொழிலாளர்கள் நலசங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகளை தாண்டி கடைகளை திறக்கக் கூடாது என அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து சில கட்டுபாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அழகு சாதன நிலையங்கள், முடி திருத்தும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, கோவை மாவட்ட சவர தொழிலாளர் நலசங்க உறுப்பினர்கள் கடைகளை திறக்க உடனடியாக அனுமதி அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனு அளித்த பின்னர் அவர் கூறுகையில், சவர தொழிலை மட்டுமே நம்பி உள்ளதாகவும் பல்வேறு கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள அரசு சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை எனவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் பொருளாதார நிலையில் பின் தங்கி உள்ளவர்கள் என தெரிவித்தனர்.

மேலும், முடி திருத்தம் மூலம் ஈட்டும் வருவாயை நம்பி வாழும் தங்களது சமுதாயத்தினர் கடைகளை திறந்து தொழில் செய்திட அரசு இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...