கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைத்தும் துண்டுகள் அணிவித்து பொதுமக்கள் மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைத்தும் துண்டுகள் அணிவித்து பொதுமக்கள் மரியாதை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் நாடே முடங்கி இருந்த நிலையில் இரவு பகலாக நாட்டு மக்களை பாதுகாக்க காவல்துறை, மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களின் பணியை போற்றும் விதமாக தண்ணீர் பந்தல் பகுதியில் பணியாற்றும் 60 தூய்மை பணியாளர்களுக்கு மதியம் விருந்து அளித்தும், துண்டு அணிவித்து அப்பகுதி பொதுமக்கள் மரியாதை செலுத்தி உள்ளனர். தூய்மை பணியாளர்களும் காவலர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் எனவும் ஊரடங்கு காலத்தில் அவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும் அவர்களை கொளரவிக்கும் வகையில் அவர்களுக்கு மதிய விருந்து அளித்து மரியாதை செய்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி நகரைச் சேர்ந்தவர் புஷ்பா மற்றும் அவரது மகள் அம்மு இருவரும் தங்களது வீட்டின் அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் வசந்தா என்பவரது பாதங்களை கழுவி, பொட்டு வைத்து மலர் தூவி வணங்கி மரியாதை செய்தது சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அனைவரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.