ஊரடங்கு காலத்தில் ஊதியம் தர மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் சிஐடியு சார்பில் மனு

கோவை: நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத எண்பத்து ஐந்து சதவீதனருக்கும் நிவாரணம் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: ஊரடங்கு காலத்தில் ஊதியம் தர மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு சார்பில் மனு அளித்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உள்ளிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் ஊதியத்தை நிறுத்துவதோ, வேலையை பறிப்பதோ கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. ஆனால், அரசின் அறிவிப்பை சில நிறுவனங்கள் பின்பற்றுவதாக தெரியவில்லை.

சிறு குறு நிறுவனங்கள் ஊதியம் தர இயலவில்லை என்பதில் நியாயம் உள்ளது. ஆனால், பெரு நிறுவனங்கள் ஊரடங்கை காரணம் காட்டி ஊதியம் தர மறுப்பது தொழிலாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கோவை சிட்கோ பகுதியில் உள்ள இன்டோசெல் நிறுவனம் ஊரடங்கு காலத்திற்கான ஊதியத்தை மறுத்துள்ளது. இதனையடுத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஊரடங்கு கால ஊதியத்தை பெற்று தர வலியுறுத்தி மனு அளித்தனர்.

முன்னதாக அவர்கள் அளித்த மனுவில், ஊரடங்கு காலத்தில் ஊதியம் தர வேண்டும் என்கிற உத்தரவு எங்களுக்கு பொருந்தாது என நிர்வாகம் தெரிவிக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தினர்.

இதேபோல, கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கோவை பி.கே.புதூரில் செயல்படும் கேரள ரோடுவேஸ் நிறுவனம் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை தர மறுக்கிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முழு ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...