கோவையில் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்க கூட்டு குழுவினர் கோரிக்கை

கோவை: நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத எண்பத்து ஐந்து சதவீதனருக்கும் நிவாரணம் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத எண்பத்து ஐந்து சதவீதனருக்கும் நிவாரணம் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி முதல் மோட்டார் வாகன பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், அரசு அறிவித்த நிவாரண தொகை முழுமையாக கிடைக்கப் பெறவில்லை எனவும் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரணம் கிடைக்க பெற நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட டூரிஸ்ட் டேக்சி, கால் டேக்சி, டூரிஸ்ட் வேன், மினி கூட்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக வாகனங்களை இயக்க முடியாத சூழலில் சாலை வரி, தகுதி சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற கடனுக்கு ஆறு மாதம் விலக்கு அளித்து வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் கேரள மாநிலம் செல்லும் போது காலதாமதம் ஏற்படுவதை தவிர்த்து பெட்ரோல் பங்குகளில் முககவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவற்றை வழங்கிட வேண்டும் என்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...