மேட்டுப்பாளையத்தில் நலிவடைந்த கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய பூண்டு வியாபாரி!

கோவை: மேட்டுப்பாளையத்தில் நலிவடைந்த கைத்தறி நெசவாளர்களுக்கு பூண்டு வியாபாரி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் நலிவடைந்த கைத்தறி நெசவாளர்களுக்கு பூண்டு வியாபாரி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது கொரானோ வைரஸ் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெய்யப்பட்ட கைத்தறி சேலைகள் தேக்கம், உற்பத்திக்கான பொருட்கள் தட்டுப்பாடு போன்றவற்றால் கைத்தறி தொழில் தற்போது முடங்கியுள்ளது, இதனால் இதனை நம்பியுள்ள ஏராளமான கைத்தறி தொழிலாளர்கள் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில், நலிவடைந்த கைத்தறி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி NSV ராமசாமி என்பவர் தனது சொந்த பணத்தில் 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிறுமுகை, ஆலாங்கொம்பு, மூலத்துறை, பகத்தூர், திம்மராயம்பாளையம், வச்சினம்பாளையம், வெள்ளிகுப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், பூண்டு, முககவசம் உள்ளிட்ட 25 வகையான நிவாரணப்பொருட்களை இன்று வழங்கப்பட்டன. நான்கு லாரிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேபோல, ஏற்கனவே கொரானோ தடுப்பு நடவடிக்கைக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பயன்பாட்டிற்காக கார் மற்றும் n95 முக கவசம், காவல்துறையினருக்கும் n95 முக கவசம் நகரில் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் என பத்து லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...