வால்பாறை வாழைத்தோட்டம் ஆறு தூர் வாரும் பணி துவக்கம்
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகரில் முக்கிய பகுதியாக உள்ளது வாழைத்தோட்டம் பகுதி. இப்பகுதியை ஒட்டி நடுமலை ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆறு தூர் வாரப்படாததால் ஆற்றில் வெள்ளம் வரும்போது ஆற்று நீர் கரையை தாண்டி வருகிறது. இதனால் பாதிப்படையும் மக்கள் இந்த ஆற்றை தூர் வாரி ஆழப்படுத்த கோரிக்கை வைத்து வந்தனர்.
இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார அனுமதி பெற்றார். இதனை ஒட்டி இன்று புதிய பேருந்து நிலையம் முன்புள்ள வாழைத்தோட்டம் ஆற்றில் தூர் வாரும் பணியினை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
மழைக்காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர். உதவி பொறியாளர், நகராட்சி பொறியாளர் சரவணபாபு, கூட்டுறவு வங்கி தலைவர் .வால்பாறை அமீது நகர செயலாளர் மயில்கனேசன், உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.