தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வால் கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கட்சியினர் மற்றும்பொதுமக்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்தது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் ஏறவும் தெரிவித்திருந்தது.
இப்படியிருக்க சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிட்டுள்ளதாவது ;-
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்..! என ரஜினி ட்விட் செய்துள்ளார்.
ரஜினியின் இந்த கண்டன பதிவுதற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.