வால்பாறையில் தடுப்பணைகள் விரைவில் தூர்வாரப்படும் - நகராட்சி ஆணையர்

கோவை: வால்பாறையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க திடீரென ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர் தடுப்பணை விரைவில் தூர்வாரப்படும் என்று தெரிவித்தார்.


கோவை: வால்பாறையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க திடீரென ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர் தடுப்பணை விரைவில் தூர்வாரப்படும் என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் வசதிக்காக அக்காமலை வனப்பகுதியில் கருமலை தேயிலை தோட்டத்தில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இயற்கை உந்துசக்தி மூலம் வால்பாறையில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி நீர் வந்து சேருகிறது.



இங்கிருந்து வால்பாறை நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறை நகருக்கு நீர் வினியோகம் முறையாக கிடைக்கவில்லை. இதனை முன்னிட்டு வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் அக்காமலை தடுப்பணையை பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையாளர், அக்காமலை தடுப்பணை விரைவில் தூர்வாரப்படும் என்றார். மேலும், அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதற்காக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்படும் என்றவர், மழைக்காலம் வரும் முன் இப்பணிகள் நடைபெற்று வால்பாறை நகருக்கு தங்குதடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் கோ ஆப்பரேட்டிங் காலனியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் முறையான சுத்திகரிப்பு பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நகராட்சி ஆணையர் ஆய்வின் போது நகராட்சி அலுவலர் ரகுபதி உடனிருந்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...