கோவை: கோவையில் இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்களை ஊருக்கு அனுப்பி வைக்கும் படி கோரிக்கை விடுத்த வந்த நிலையில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் எல் துவங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் எந்தெந்த மாநிலம் என்பது குறித்தும் அவர்களில் ஊருக்கு செல்ல விரும்புவர்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் இன்று துவங்கியது.

இதனை தொடர்ந்து, கோவை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் மாநிலத்தை சேர்ந்த 1140 பேர் இன்று மாலை ரயில் மூலம் பீகார் மாநிலம் சாகர்ஷா அனுப்பி வைக்கப்பட்டனர்.

சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களை, பதிவு செய்த அடிப்படையில் வாகனம் மூலம் ரயில் நிலையம் அழைத்து வந்த மாவட்ட நிர்வாகம், ரயில் நிலையத்தில் வைத்து அவர்களுக்கு உடல்நிலை வெப்ப சோதனை செய்தனர்.

கோவை ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்களை முககவசம் கட்டாயம் அணியும்படி அறிவுறுத்திய காவல் துறையினர், அவர்களுக்கு பயண டிக்கெட், இரவு உணவு, தண்ணீர், கை கழுவ சோப் போன்றவை வழங்கி ரயில் பெட்டிகள் உள்ளே அனுப்பபட்டனர்.
கோவை வடக்கு, பொள்ளாச்சி, சூலூர், கிணத்துகடவு ஆகிய பகுதிகளில் இருக்கும் அவர்கள் இன்று சொந்த ஊருக்கு இன்று சிறப்பு ரயில் மூலம் மாலை 8:22 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களை நாளை காலை இரண்டாவது சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.
இந்த ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆட்சியர் கு ராசாமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கோவையில் வடமாநிலங்களை சேர்ந்த 1 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் 22 ஆயிரம் தொழிலாளர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் ஊருக்கு செல்ல விண்ணப்பித்துள்ளதால் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பட இருக்கின்றனர்.
இன்று, 1140 பேர் பீகார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோவையிலிருந்து சிறப்பு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாளை காலை 1140 பேர் பீகார் செல்கின்றனர் எனவும், ஓரிஸா, உத்திரபிரதேசம், மேற்குவங்கம், ஜார்கண்ட்,அஸ்ஸாம் மாநில தொழிலாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎனவும் தெரிவித்தார்.பெருவாரியான தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி இருக்கின்றனர் எனவும், 22 ஆயிரம் பேர் ஒரு வாரத்திற்குள் அவர்கள் சொந்த மாநிலம் அனுப்பபடுவார்கள் எனவும் இதற்கான செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். வடமாநில தொழிலாளர்களை சமூக இடைவெளியுடன் வாகனங்களில் ரயில் நிலையத்திற்கு அழைத்து வர வேண்டும் ,இதற்கு நான் பொறுப்பேற்கின்றேன் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.