சென்னை: கொரோனா ஊரடங்கு மே 17 வரை நீடிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் நேற்று, 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று தெரிவிக்க நிலையில், தனி மனித இடைவெளி மற்றும் நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானங்களை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.