கோவை: கோவை மாநகராட்சியில் கள ஆய்வுப்பணி அலுவலர்கள் இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் ஆர்.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சியில் கள ஆய்வுப்பணி அலுவலர்கள் இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் ஆர்.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக கள ஆய்வுக்குழு அலுவலா்கள் இயக்குநா் புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், சிட்கோ மேலாண்மை இயக்குநர் ஆர்.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கள ஆய்வுக்குழு அலுவலர்கள் தெரிவித்ததாவது:-
கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 10 மண்டலங்களிலுள்ள 30 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசோதனை முகாம்கள் நடைபெறுவதையும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனைவரும் சமூக விலகல், முகக்கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி எந்திரங்கள் கொண்டு தொடர்ச்சியாக பொது இடங்களில் மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டது என கள ஆய்வுக்குழு அலுவலர்கள் இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், சிட்கோ மேலாண்மை இயக்குநர் ஆர்.கஜலெட்சுமி இ.ஆ.ப., ஆகியோர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (முத்திரைத்தாள்) ப.காந்திமதி அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலா் கலால்) எம்.எஸ்.கலைவாணி அவர்கள், நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ்பாபு அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் என்.பிரேமானந்தன் அவர்கள், துணை இயக்குநர் (சுகாதாரம்) பிஅருணா, மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமாரரத்தினம், டி.ஆர்.ரவி, மகேஷ்கனகராஜ், ஏ.ஜே.செந்தில்அரசன், ம.செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.