திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று திருப்பூர் ரயில் நிலையம் அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், நாங்களாவது எங்களிடம் இருக்கும் பணத்தை தருகிறோம் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என சாலையில் துண்டை விரித்து பணத்தை காட்டினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரசம் செய்தும் கேட்காத வட மாநிலத் தொழிலாளர்களை அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு கொடுத்து வருவாய்த் துறையினர் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பின்னர், போராட்டத்தை தூண்டியதாக அங்கிருந்த 2 வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் திருப்பூர் ரயில் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.