கோவை: வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மற்றொரு மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மற்றொரு மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் கடந்த மாதம் 18ம் தேதி வாசுகி என்பவரின் மாட்டை சிறுத்தைப்புலிகள் அடித்துக் கொன்று தின்ற சம்பவம் நடைபெற்றது.
பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் மாட்டை கடந்த 26ம் தேதி மாட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் நடைபெற்றது.
இந்த நிலையில், அதே மாடசாமியின் மற்றொரு மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மாட்டை சிறுத்தைப் புலிகள் கொன்று தின்றது தெரியவந்தது.
தொடர்ந்து தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் மாட்டை சிறுத்தைப்புலிகள் கொன்று தின்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடனடியாக சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் வனத்துறையினரால் கண்காணிப்பு கேமரா, வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து தெரியப்படுத்த எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டு உள்ளதை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம் (ACF) சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.