கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கபட்டதை தொடர்ந்து குடிமகன்கள் அளவு கடந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கபட்டதை தொடர்ந்து குடிமகன்கள் அளவு கடந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
கடந்த 43 நாட்களாக மதுபான கடைகள் இல்லாததால் திண்டாடி வந்தவர்கள் இன்று கடைகள் திறந்தது முதல் கிடைத்தவரை மதுபானங்களை வாங்கி செல்ல முயல்கின்றனர்.
இந்நிலையில், தடாகம் சாலையில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. காளியாபுரம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் இருவர் மது அருந்திய பின்னர் மதுபானங்களை வாங்கி சென்றுள்ளனர். இருவரும் வெவ்வேறு வாகனங்களில் வந்திருந்த நிலையில் ஒருவரது ஸ்கூட்டர் வாகனத்தில் மது வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இருவரும் வீட்டை நோக்கி பயணம் செய்துள்ளனர். இதில் சற்று முன்னே சென்ற நபர் பின்னால் வந்த தனது நண்பரை காணாததை கண்டு மற்ற நண்பர்களுடன் திரும்பி சென்று பார்த்தபோது வரும் வழியில் போதையில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை எழுப்ப முயன்றும் அவரால் எழ முடியவில்லை. தலையில் தண்ணீர் ஊற்றியும் போதை தெளிந்தபாடில்லை. இதனால் அங்கேயே காத்திருந்து அவர் சற்று போதை தெளிந்தவுடன் நண்பர்கள் அவரை அழைத்து சென்றுள்ளனர்.