கோவை: கோவையில் ஆத்துப்பாலம் அருகே மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்த இளைஞர்கள் கட்டுபாட்டை இழந்து மின் மயான சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் ஆத்துப்பாலம் அருகே மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்த இளைஞர்கள் கட்டுபாட்டை இழந்து மின் மயான சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 44 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
காலை முதலே பல்வேறு பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் இரண்டு இளைஞர்கள் மது அருந்திய நிலையில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அதிவேகத்தில் வந்தவர்கள் குனியமுத்தூர் அடுத்த ஆத்துபாலம் பகுதியில் வந்த போது அதிக போதை காரணமாக வாகன கட்டுபாட்டை இழந்து ஆத்துப்பாலம் மின்மயான சுவற்றில் மோதியுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.