கோவை: மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
கோவை: மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் சார்பாக மதுபான கடைகளை மூடக்கோரி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் போராட்டம் நடத்துவதற்காக உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது செல்வபுரம் காவல் துறையினர் அர்ஜீன் சம்பத்தை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
மதுபான கடைகளை தமிழக அரசு நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், கோவில்களை உடனடியாக திறந்து, பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.