திருப்பூர்: பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் 1400 ஏழை எளிய மக்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
திருப்பூர்: பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் 1400 ஏழை எளிய மக்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்சயில் 1400 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, தேங்காய், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன், கேத்தனூர் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால், கூட்டுறவு சங்க தலைவர் சித்திராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து, காரணம்பேட்டையில் கோடங்கிபாளையம் ஊராட்சி சார்பில் 12 லட்சம் மதிப்பீட்டில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் காவி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.