கோவை மாவட்டத்தில் 44 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு! சமூக இடைவெளியுடன் மது வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்!

கோவை: கோவை மாவட்டத்தில் 44 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டது. மதுப்பிரியர்கள் தனி மனித இடைவெளிவிட்டு மது வாங்கி செல்ல, காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து கடைகளிலும் நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுவகைகளை வாங்கி சென்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 44 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டது. மதுப்பிரியர்கள் தனி மனித இடைவெளிவிட்டு மது வாங்கி செல்ல, காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து கடைகளிலும் நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுவகைகளை வாங்கி சென்றனர்.

கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மதுக்கடைகளும் பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வு செய்யப்பட்ட நிலையில் 44 நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் இன்று மதுக் கடைகள் திறக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 295 மதுக்கடைகள் இருக்கும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 88 மதுக் கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் உள்ள 207 மதுக் கடைகள் மட்டும் இன்று திறக்கப்பட்டது.



காலை 9 மணி முதல் மதுக் கடைகளின் முன்பாக ஏராளமானோர் நீண்ட வரிசையில் நிற்க துவங்கினர்.



10 மணிக்கு கடை திறந்தவுடன் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வகைகளை வாங்கிச் சென்றனர்.



ஒருவருக்கு புல் பாட்டில் மட்டுமே மது வழங்கப்பட்டது. முக கவசம் அணிய வேண்டும், ஆதார் அட்டை கையில் வைத்திருக்க வேண்டும், தனி மனித இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியபடி இருந்தனர்.



கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள மதுக் கடையில் காலை 9 மணிக்கு ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் வரிசையில் நின்று, பாஸ்போட் எண்ணைக்காட்டி மது வகைகளை வாங்கி சென்றனர். இதேபோன்று கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை நேரத்திலேயே நீண்ட வரிசையில் நின்று மதுப் பிரியர்கள் மது வகைகளை வாங்கி சென்றனர். அனைத்து கடைகளிலும் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மது வகைகளை வாங்கி சென்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...