சென்னை: தமிழக அரசைக் கண்டித்து கருப்பு சின்னம் அணியும்படி திமுக கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தின் முன்பு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை: தமிழக அரசைக் கண்டித்து கருப்பு சின்னம் அணியும்படி திமுக கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தின் முன்பு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்தி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சமூக தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என்பதால் அரசின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் கருப்பு சின்னம் அணிந்து மே 7ம் தேதி காலை 10 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் நின்று 15 நிமிடம் முழக்கமிடுங்கள்.திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச்சின்னம் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தனது இல்லத்தின் முன்பு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, நோய் தடுப்பில் அலட்சியமும் மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.