மேட்டுப்பாளையத்தில் கொரானோ தொற்று ஏற்பட்டு பகுதிகளில் வைக்கபட்டிருந்த தடுப்பு வேலிகள் இன்று வருவாய்த்துறை மூலம் அகற்றபட்டன

மேட்டுப்பாளையத்தில் கொரானோ தொற்று ஏற்பட்ட பகுதிகளில் வைக்கபட்டிருந்த தடுப்பு வேலிகள் இன்று வருவாய்த்துறை மூலம் அகற்றபட்டன.

கோவை: மேட்டுப்பாளையத்தில் கொரானோ தொற்று ஏற்பட்ட பகுதிகளில் வைக்கபட்டிருந்த தடுப்பு வேலிகள் இன்று வருவாய்த்துறை மூலம் அகற்றபட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரானா வைரஸ் தொற்றால் 42பேர் பாதிக்கபட்டனர்.

வைரஸ் தொற்றால் முதலில் 20 பேர் மட்டுமே பாதிக்கபட்ட நிலையில், பின்னர் அது அவர்களது குடும்பம் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 42 பேருக்கு தொற்று ஏற்பட்டது

 பின்னர் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஜ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டு சிகிச்சை பெற்றனர்.

இதனையடுத்து, நகரின் 14 பகுதியில் கொரானோ தொற்று ஏற்பட்டதால் அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்.எஸ்.புரம், எஸ்.எம் நகர் ,பாலஜி நகர் உள்ளிட்டஇடங்களில்தடுப்பு வேலிகள் அமைக்கபட்டன.

கொரானோ தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க, அந்த சாலைகள் முழுவதும் தகர சீட்டுகளால் அடைக்கபட்டன. இதனிடையே இந்த பகுதிகளில் 

வசிப்பவர்கள், கொரானோ

சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 14நாட்கள் கண்கானிப்பில் வைக்கபட்டதால் தொடர்ந்து அந்தசாலைகள் முழுவதும் அடைக்கபட்டே இருந்தது.

இந்த நிலையில் தற்போது 14 நாள் கண்கானிப்பு முடிவடைந்து, அந்த பகுதியில் மேலும் தொற்று யாருக்கும் பரவாமல் இருப்பது உறுதி செய்யபட்டதை தொடர்ந்து நேற்று மாலை வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் 

இணைந்து பாதுகாப்பிற்காக மூடபட்ட தடுப்புகளை அகற்றினர்.

கோவை வடக்கு கோட்டாச்சியர் சுரேஷ் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து எல்.எஸ்.புரத்தில் துவங்கி எஸ்.எம்.நகர், பாலாஜி நகர் என 10 இடங்களில்தடுப்புகளை அகற்றினர்.

இதனால், கடந்த ஒரு மாதகாலமாக மூடபட்ட தெருச்சாலைகள் அகற்றபட்டதால் அந்த பகுதி மக்கள் வெளி நபர்கள் நடமாட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், மீதமுள்ள 4 பகுதிகளில் உள்ள தடுப்புகள் நான்கு நாட்களுக்கு பின் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...