கோவையில் மதுக்கடைக்கு வாழை இலை தோரணம் கட்டி, ஹோம குண்டம் வளர்த்து மதுபான விற்பனைக்கு தயாரான மதுக்கடை ஊழியர்கள்..!

கோவை: கோவையில் நாளை முதல் மதுக்கடை திறக்கப்பட உள்ள நிலையில், வாழை இலை தோரணம் கட்டி, ஹோம குண்டம் வளர்த்து பூஜையிட்டு மதுவிற்பனைக்கு கடையை ஊழியர்கள் தயார் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நாளை முதல் மதுக்கடை திறக்கப்பட உள்ள நிலையில், வாழை இலை தோரணம் கட்டி, ஹோம குண்டம் வளர்த்து பூஜையிட்டு மதுவிற்பனைக்கு கடையை ஊழியர்கள் தயார் செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 295 டாஸ்மாக் மதுபான கடைகளில் 207 கடைகள் மட்டுமே நாளை திறக்கப்பட உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 88 மதுபான கடைகள் திறக்க படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அருகில் உள்ள மற்ற மதுபான கடைகளில் கூடுதல் பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மதுபானங்களை வாங்க 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், 40ல் இருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு மணி முதல் மூன்று மணி வரையும் அதற்கு கீழ் உள்ளவர்கள் மூன்று மணி முதல் ஐந்து மணி வரை மதுபானங்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுக்கடைகள் முன்பாக பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. தனிமனித இடைவெளியுடன் மதுபானம் வாங்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குளத்துபாளையத்தில் உள்ள மதுக்கடையில் இன்று வாழை இலை தோரணம் கட்டி, ஹோம குண்டம் வளர்த்து ஊழியர்கள் பூசையிட்டு, மதுவிற்பனைக்கு மதுக்கடையை தயார் செய்தனர்.

குளத்துபாளையத்தில் மதுபான கடை எண் 1773 மதுக்கடை மூடப்பட்ட நிலையில், 44 நாட்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படுவதால் இன்று கடையை ஊழியர்கள் தயார் செய்துள்ளனர். அப்போது, வாழைமர தோரணம் மற்றும் பூசை என ஊழியர்கள் அசத்தியுள்ளனர். இன்று மாலை மதுக்கடைகளுக்கு சரக்குகள் இறக்கப்பட்டு நாளை காலை முதல் மதுவிற்பனையானது தொடங்க இருக்கின்றது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...