தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு நாளை முதல் அமல்..! மதுபிரியர்கள் அதிர்ச்சி!

சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலையை குவார்ட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தி இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலையை குவார்ட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தி இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், மே 07ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகள், தவிர்த்து மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதிலும் சமூக விலகல் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 15 சதவீதம் ஆயத்தீர்வை வரியை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

அதன்படி, சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் சில்லறை விற்பனை விலை ரூ.10 கூடுதலாக விற்கப்பட இருக்கிறது. 180 மி.லி.,பிரீமியம் வகை மதுபாட்டில் சில்லறை விலை ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்கள் வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, காலை 10 மணி முதல் 1 மணி வரை - 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயது வரை உள்ளோரும், 40 வயதிற்குள் உள்ளோர் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானங்கள் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...