மது யாருடைய அத்தியாவசிய தேவை?

சென்னை: ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்கிறது, மது யாருடைய அத்தியாவசிய தேவை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை: ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்கிறது, மது யாருடைய அத்தியாவசிய தேவை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே நாளை (மே 7) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

படிப்படியாக மது விலக்கு என்று சத்தியம் செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய அரசு இது என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், எவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறதோ அவர் 500 மதுக்கடைகளை மூடி 3ஆவது பதவிக்காலத்தை தொடங்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இது யாருடையை அத்தியாவசிய தேவை, அந்த வருமானத்தை நம்பி இருக்கும் அரசுக்கா, சாராய ஆலைகளின் விற்பனை குறைந்ததை நினைத்து கவலையில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சியினருக்கான என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...