மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினருக்கு இலவச யோகா வகுப்பு - ஈஷா நிறுவனர் சத்குரு அறிவிப்பு

கோவை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஈஷா யோகா வகுப்பை இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார்.

கோவை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஈஷா யோகா வகுப்பை இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார்.

மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில் பங்கேற்க முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம். பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேக லாகின் விவரங்கள் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் மொபைல் அல்லது கணினியில் 7 வீடியோக்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு வீடியோவும் 60 முதல் 90 நிமிடங்கள் இருக்கும். 

அதில் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி நிலைகள் குறித்து சத்குரு மிக ஆழமாகவும், எளிமையாகவும் விளக்கி இருப்பார். மேலும், எளிமையான அதேசமயம், சக்திவாய்ந்த வழிகாட்டு தியானங்களும் இடம்பெற்று இருக்கும்.

தற்போதைய சவாலான சூழலில் பலரும் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மன ரீதியாகவும், உணர்ச்சி நிலையிலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, அவர்கள் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு அமைதியான, ஆனந்தமான மனிதராக மாறுவதற்கு இவ்வகுப்பு பேருதவியாக இருக்கும். 

நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு வகுப்பை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற தொன்மையான, சக்திவாய்ந்த க்ரியாவுக்கு நேரில் தீட்சை வழங்கப்படும். ஈஷாவின் ஆரம்ப நிலை வகுப்பான இதில் பங்கேற்றதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் அடிப்படையே மாற்றம் கண்டுள்ளது என்பது வரலாற்று ரீதியான சான்றாக உள்ளது.

சத்குரு அவர்களால் எந்தவித மத நம்பிக்கையும் இன்றி, முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வகுப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆன்லைன் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்க tamil.sadhguru.org/IYO என்ற இணைதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...