கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்!

கோவை: கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட வேண்டும், அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தியபடி பணிபுரிந்து வருகின்றனர்.


கோவை: கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட வேண்டும், அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தியபடி பணிபுரிந்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சியில் 3000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்கம், ஜனசக்தி லேபர் யூனியன், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் கோரிக்கை அட்டைகளை அணிந்த படி தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா தொற்றினை கண்டறியும் பி.சி.ஆர்.சோதனை நடத்தப்பட வேண்டும், தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போலவே, ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும், போராட்டம் நடத்தியதாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுனர் மணிகண்டன் என்பவரை பணியில் சேர்க்க வேண்டும் எனவும் இந்த கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சியில் 2500க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் இந்த கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிபுரிந்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...