மதுக்கடைகளை நாளை திறக்க கூடாது என வலியுறுத்தி பா.ம.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க கூடாது என வலியுறுத்தி பா.ம.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க கூடாது என வலியுறுத்தி பா.ம.கவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கடந்த 43 நாட்களாக அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுபான கடைகள் முழுவதும் தமிழகத்தில் மூடப்பட்டது.

இந்நிலையில், அண்டை மாநிலங்களான பெங்களூரு மற்றும் ஆந்திராவில் நேற்று முன்தினம் கடைகள் திறக்கப்பட்டதால் தமிழக எல்லைப் பகுதிகளில் மதுபானங்களை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அண்டை மாநிலங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்கும் நோக்கில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்ட பா.ம.கவினர் நாளை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய அக்கட்சியின் மாவட்ட தலைவர் குமார் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மதுவிலக்கை வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த இது சரியான தருணம் என அன்புமணி ராமதாசும் வலியுறுத்தி உள்ள நிலையில் இந்த கொரோனா காலகட்டம் மதுவிலக்கை அமல்படுத்தச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மதுவிற்கு அடிமையான 99% பேர் மது இல்லாமல் வாழ முடியும் என்ற மனநிலைக்கு மாறி உள்ளதால் இந்த நேரத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது எனவும் கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் சமூக தொற்று பரவி உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதனால் நாளை கடைகள் திறக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...