குன்னூரில் கோவிட்-19 க்கு எதிரான போரில் காவலர்களுக்கு உதவ முன்வந்த பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியின் மாணவர் படையினருக்கு தீக்ஷா செயலி மூலமாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி: குன்னூரில் கோவிட்-19 க்கு எதிரான போரில் காவலர்களுக்கு உதவ முன்வந்த பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியின் மாணவர் படையினருக்கு தீக்ஷா செயலி மூலமாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியின் மாணவர் படையினர் கோவிட்-19 க்கு எதிரான போரில் காவலர்களுக்கு உதவ முன்வந்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு தீக்ஷா செயலி மூலமாக கோவிட்_ 19 குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு பின்னர் சமுதாய இடைவெளி , உணவு வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுபாடு ஆகியவற்றில் காவலர்களுக்கு உதவ அனுமதி பெற்றனர். தேசிய மாணவர் படையின் பொறுப்பாளர் சிந்தியா ஜார்ஜ் வழி நடத்துதலில், கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் தங்கள் சேவைகளை அளித்து வருகின்றனர்.
இது போன்ற தன்னார்வம் அவர்களுக்கு பேரிடர் மேலாண்மையின் அடிப்படைகளையும், அவசர காலத்தில் தேசிய சிந்தனைகளையும், மகளிருக்கான அதிகாரத்தின் சாரத்தையும்கற்றுத்தந்துள்ளது என்று தேசிய மாணவர் படையின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் வரை தங்களது தன்னார்வ தொண்டுகள் தொடரும் என உறுதியளித்தனர்.