தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை- கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை- கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்.


கோவை: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறது.

அதேபோல அரசின் சார்பில் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நோயாளிகள் எந்த சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு சென்றாலும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. . அதேபோல, நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்படியிருக்க கோவை அவிநாசி சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்காக சென்ற நோயாளியிடம் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக ரூபாய் 40,000 வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி தொடரும் குற்றச்சாட்டையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனா பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை, என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள அரசு அங்கீகரித்த கட்டணம் ரூபாய் 4,500.

அந்த 4500 ரூபாய் தமிழக அரசால் மருத்துவமனைகளுக்கு திருப்பி அளிக்கப்படும், என தெரிவித்துள்ளார். எனவே, தனியார் மருத்துவமனைகள் யாரும் பரிசோதனைக்கு வரும் மக்களிடம் பணம் வசூலிக்க கூடாது. மேல் சிகிச்சைக்கான தொகையை அவர்கள் மக்களிடம் பெற்று கொள்ளலாம்.

 

இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கூறுகையில்:-

கொரோனா பரிசோதனைக்கு அரசாங்கம் நிர்ணயித்த 4500 ரூபாய் மட்டுமே வசூலிக்கபடுகிறது. அதேபோல

சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் 4500 ரூபாய் கட்டணத்தை அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு திரும்ப தருவது குறித்து எந்த தகவலும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெளிவான விளக்கம் கேட்டு அதன்படி பரிசோதனை தொகையை வசூலிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...