கோவை: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் ராமா கோயில் கல்யாண மண்டபத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்காக கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் ராமா கோயில் கல்யாண மண்டபத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்காக கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் அம்மா உணவகத்தின் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிற கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில், மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், உதவி நகா்நல அலுவலர் வசந்தகுமார் அவர்கள், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.