குன்னூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட தொகுப்பினை வழங்கிய சாந்தி ராமு எம்.எல்.ஏ

லகிரி: குன்னூர் நகராட்சிக்கு தமிழக அரசின் கோவிட் 19 நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டரில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை தொடங்கி வைத்த குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட தொகுப்பினை வழங்கினார்.


நீலகிரி: குன்னூர் நகராட்சிக்கு தமிழக அரசின் கோவிட் 19 நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டரில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை தொடங்கி வைத்த குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட தொகுப்பினை வழங்கினார்.



குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் கிருமி நாசினி அவ்வப்போது தெளித்து வருகின்றனர் துரிதமாகவும், விரைவாகவும் செயல்படும் வகையில் தமிழக அரசு கோவிட் 19 நிதியில் இருந்து ரூபாய் 12 இலட்சம் மதிப்பில் டிராக்டரில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு கொடியசைத்து துவக்கி வைத்து நகராட்சியில் பணிபுரியும் சுமார் 225 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார்.

பின்னர் இது குறித்து அவர் பேசுகையில், தமிழக அரசு முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவா வண்ணம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதியில் நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக, இன்று குன்னூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து அரிசி, மற்றும் காய்கறி தொகுப்பை வழங்கியது மன நிறைவு அளிப்பதாக கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...